×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு திண்டுக்கல்லில் மண்பானை விற்பனை விறுவிறு

 

திண்டுக்கல், ஏப்.29: திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மண் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது.இதனால் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி உள்ளனர். சூட்டை தணிக்க பழச்சாறு, குளிர்பானங்கள் பருக ஆர்வம் காட்டுகின்றனர். திண்டுக்கல்லில் குளிர்ந்த குடிநீர் வழங்கும் வகையில் குழாய் பொருத்திய மண் பானை, கூஜா, ஜாடி, தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளது.

திண்டுக்கல் கல்லறை தோட்டம், நாகல் நகர், நொச்சி ஓடைப்பட்டியில் பானை விற்பனை ஜோராக நடக்கிறது. இங்கு 8லி., 10 லி., 15 லி., கொள்ளளவு கொண்ட பானைகள் விற்பனையாகிறது. விலை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கிறது. இது குறித்து மண்பானை வியாபாரி கஜேந்திரன் கூறுகையில்,“தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மண் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. மண் பானை தண்ணீர் குளிர்ச்சி தருவதோடு உடலுக்கு எந்த கேடும் இல்லை. இதனால் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது’’ என்றார்.

The post வெயிலின் தாக்கம் அதிகரிப்பு திண்டுக்கல்லில் மண்பானை விற்பனை விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul district ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...